ஜனாதிபதியை TPA தனியாக சந்திக்கும்

SJBயுடனான சந்திப்பிலும் பங்கேற்கும்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 11ஆம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவாகவும் கலந்துரையாடும். “பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துதல்” தொடர்பில், ஜனாதிபதி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

அதேவேளை, இன்று 05ஆம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின் தூதுக்குழுவிலும் நடைபெற்று பொதுவான தேசிய பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவோமென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...