ரஷ்ய அமைச்சரை சந்திக்காதது ஏன்?

ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற 'ஷங்காய் கோர்பரேஷன் ஓர்கனைசேஷன்' என்ற பன்னாட்டு அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை சந்திக்காதது ஏன் என்று எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தரீக் ஈ இன்சாப் கேள்வி எழுப்பியுள்ளது.

இம் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த சீனா, கஸகஸ்தான், கைரிஜிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த பாக். வெளிவிவகார அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்திய மற்றும் ரஷ்ய அமைச்சர்களை சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டதாக 'த நியூ இன்டர்நெஷனல்' ஊடகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...