17 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 17 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

செப்டம்பர் இறுதியில் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. கராச்சியில் முதல் 4 போட்டிகளும், லாகூரில் கடைசி 3 போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்தத் தொடர் முடிந்ததும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலகக் கிண்ண டி20 தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி, டிசம்பரில் மீண்டும் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணி 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...