தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மத்திய கல்லூரி மாணவர் குடும்பங்களுக்கு லங்கா IOC, ICF உதவி

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவற்றால் நாடு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், LIOC மற்றும் இந்திய CEO மன்றம் இணைந்து பல CSR நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றன. LIOC மற்றும் ICF என்பன தெஹிவளை எஸ். டி. எஸ். ஜயசிங்க மத்திய கல்லூரி மாணவர்களின் ஆதரவற்ற குடும்பங்களுக்கு ரூ. 2 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளன.

LIOC மற்றும் ICF ஆகியவற்றின் இந்த முன்முயற்சி பாடசாலை நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சவாலான நேரத்தில் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தமை உள்ளூர் சமூகத்தால் பாராட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பேசிய LIOC முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா, 'LIOC எப்பொழுதும் நல்ல நோக்கத்துக்காக பங்களிக்க முயற்சிக்கிறது. எங்களின் தற்போதைய முயற்சிகள் பொருளாதார சவால்களுக்கு எதிராக போராடுவதற்கும், உணவுப் பொருட்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பங்களிப்பது எப்போதும் நோக்கமாக உள்ளது. இதன் மூலம் வசதி குறைந்த மாணவர்களின் கல்வியை தடையின்றி தொடர வழிவகுக்கின்றது' என்றார்.

விழாவில் LIOC நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா, அதிபர் ஜகத் இடமேகம், துணை அதிபர் திருமதி சபிதா குணதிலக, இந்திய CEO மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய உமேஷ் கௌதம், அசோக் லேலண்ட் பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் கிஷோர் ரெட்டி - பிளாட்டினம் ரியாலிட்டி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் வன் ஹொஸ்பிற்றாலிற்றி PTPL (இலங்கை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வாய்ப்பை வழங்கியதற்காக பாடசாலை நிர்வாகத்திற்கு LIOC மற்றும் ICF நன்றியை தெரிவித்ததுடன், அத்தகைய உதவியை தொடர்வதாகவும் அவர்களுக்கு உறுதியளித்தது.


Add new comment

Or log in with...