QR குறியீட்டை காட்சிப்படுத்த வேண்டாம்; அழித்து விட்டு மீண்டும் பதிவு செய்ய வசதி

- தற்போதுள்ள குறியீட்டை அழித்து மீண்டும் பதிவு செய்ய வசதி

தேசிய எரிபொருள் அட்டை பயனர்கள் தங்களது வாகனத்தின் QR குறியீட்டை ஏனையோருக்கு தெரியும் வண்ணம் பொது வெளியில் காட்சிப்படுத்த வேண்டாமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அத்துடன், வேறு எவரும் அதனை சட்டவிரோதமாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய பாதுகாப்பான இடத்தில் அதனை பேணுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், அவ்வாறு தங்களது QR குறியீடு தொடர்பில் சந்தேகம் காணப்படுமாயின், தற்போதுள்ள தங்களது விபரத்தை நீக்கி மீண்டும் பதிவு செய்வதற்கான தெரிவும் fuelpass.gov.lk தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...