சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டோம்

JVP தலைவர் -அநுரகுமார தெரிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்தில் தேசிய மக்கள் சக்தி அங்கம்வகிக்காது என அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உத்தேச சர்வகட்சி அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட காலவரையறை இல்லாத காரணத்தால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் புதிய விடயங்கள் எதுவும் கிடையாதென ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி மேற்கொண்ட கொள்கை விளக்க உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

பல்வேறு அரச தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் புதிய கூட்டத் தொடர்களில் உரையாற்றியுள்ளனர். அதேபோன்று வரவு செலவுத் திட்ட உரைகளையும் கேட்டுள்ளேன். அதன்போது ஒரே விடயங்கள் சில அனைத்து உரைகளிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.இதன்படி தற்போதைய ஜனாதிபதியின் உரையிலும் இவற்றை தவிர வேறு எதுவும் கிடையாது.


Add new comment

Or log in with...