ஜோன் கீல்ஸ் மகப்பேறு மற்றும் தந்தைவழி விடுப்பு நாட்களை சமமான 100 நாட்கள் கொண்ட பெற்றோர் விடுப்பாக அறிமுகப்படுத்துகிறது

ஜோன் கீல்ஸின் பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கத்தை (டிஈஐ) வலுப்படுத்துவதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க முயற்சியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வன் ஜேகேஎச் இன் சமீபத்திய முன்முயற்சியானது 2 ஆகஸ்ட் 2022 முதல் பெற்றோர் விடுப்பு என சமமான மகப்பேறு மற்றும் தந்தைவழி விடுப்பு நாட்களை அறிமுகப்படுத்துவதாகும்.

குழந்தை பிறக்கும் போது அல்லது தத்தெடுக்கப்படும் போது 100 நாட்கள் மகப்பேறு விடுப்பை குழுமம் தொடர்ந்து வழங்கும் அதே வேளையில், 5-நாட்களுக்கு வழங்கப்படும் தந்தைவழி விடுப்பானது இரு பெற்றோரின் பங்குகளின் சமபங்களிப்பை உறுதி செய்வதற்காகவும் மற்றும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பில் இருவரினதும் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாகவும் 100 நாட்களாக அதிகரிக்கப்படும். மேலும், ஒவ்வொரு குடும்பமும் தங்களின் குழந்தை அல்லது குழந்தைகளின் பிறப்பின் போது தனித்துவமான சூழ்நிலைகளைக் கொண்டிருக்கலாம் என்பதை குழுமம் புரிந்துகொண்டுள்ளதால், ஒரு ஊழியர் 100 நாட்கள் பெற்றோர் விடுப்பை எவ்வாறு பெறலாம் என்பதில் நெகிழ்வுத்தன்மை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா 'சம எண்ணிக்கையிலான மகப்பேறு மற்றும் தந்தைவழி விடுப்பு நாட்களை வழங்குவதற்கான மற்றொரு முக்கிய நோக்கம், மகப்பேறு விடுப்பின் சாத்தியமான நிகழ்வுகளின் காரணமாக, வேலைக்கு பெண்களைச் சேர்ப்பதில் தொடர்புடைய பாகுபாட்டை அகற்றுவதாகும். குழுமத்தின் 5 ஆண்டுகால இலக்கான 40% பெண்களை பணியமர்த்ததுவதில் அடைவதன் மூலம், ஜோன் கீல்ஸ் குழுமத்திற்குள் ஒரு நபரின் தொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாலின சார்புகளை நாம் நிவர்த்தி செய்வது இன்றியமையாததாகும்.' எனக் கூறினார்.

குழந்தை பிறந்த அல்லது தத்தெடுக்கும் போது மகப்பேறு விடுப்பின் எண்ணிக்கையை 100 நாட்களாக உயர்த்தியதன் மூலம், ஜோன் கீல்ஸுக்கு வெளியே உள்ள பணியாளர்களுக்கு ஆதரவை வழங்குவதை குழுமம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நெகிழ்வான ஏற்பாட்டானது, பணிபுரியும் பெண்கள் தங்கள் மகப்பேறு விடுப்புக்குப் பிறகு அந்தந்த பணியிடங்களுக்குத் திரும்புவதற்கு உதவும், இது பரந்த சமுதாயத்தில் பன்முகத்தன்மை சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் குறித்த எங்கள் உறுதிமொழிகளை உண்மையிலேயே வலுப்படுத்துகிறது. குழுமமானது அதன் பன்முகத்தன்மை சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை வன் ஜேகேஎச்  என்ற தர வகையின் கீழ் இயக்குகிறது மற்றும் பணியாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை அடைவதற்கும் மற்றும் விநியோகச் சங்கிலி மற்றும் சமூகங்களில் பெண்களுக்கு வலுவூட்டுதல், விசேடத் தேவை உள்ளவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், மூன்றாம் பாலினம் மற்றும் மற்ற வகையிலான பாலின உறவு சார்ந்த சமூகத்தினரின் உள்ளடக்கத்தை உறுதி செய்ய செயல்படுகிறது.

கொழும்பு பங்குபரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, 7 வகையான  பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடாத்தும் ஜோன் கீல்ஸ் குழுமம், 2020 ஆம் ஆண்டில் வணிகத்தில் காலடி வைத்து மற்றும்  இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு ஜோன் கீல்ஸ் குழுமம் எல்.எம்.டி இதழால் கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையின் 'மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்' என்று பெயர் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையூம் கொண்ட ஜே.கே.எச் ஆனது ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக 'எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்' என்ற நோக்கினை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக 'பிளாஸ்டிசைக்கிள்' ஊடாக செயற்படுகின்றது.

Add new comment

Or log in with...