ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவருக்கு விளக்கமறியல்

- போராட்டத்தில் அலரிமாளிகைக்குள் நுழைந்ததாக இருவர் கைது

கடந்த ஜூலை 09ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் முறையற்ற வகையில் நுழைந்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த  நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (02) தெரணியகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், 28 வயதான சமன்புரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்றைய தினம் (02) கொழும்பு கோட்டையை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்பாக கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் முதல் அங்கு தங்கியிருந்து அது நிறைவடையும் வேளையில் அலரி மாளிகைக்குள் முறையற்ற விதத்தில் நுழைந்து முறையற்ற ஒன்று கூடலில் ஈடுபட்டநபர்களாக கருதப்படும் இருவர் ஜா-எல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

நேற்றைய தினம் (02) கொழும்பு தெற்கு பிரிவு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் 35, 37 வயதுடைய துடெல்ல மற்றும் மாஎலிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை இன்றைய தினம் (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...