தமிழரின் நியாயமான கோரிக்கைகளுக்கு சர்வகட்சி பொது வேலைத்திட்டத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைச்சர் டக்ளஸ் பதில்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றுக்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது சேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்கு பதிலளித்து, தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலும் தெரிவித்திருப்பதாவது,

"நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்கவுமான சவாலான பணியை முன்னெடுக்க அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்கள், சிவில் சமூகங்கள் போன்றவற்றின் பங்கேற்புடன் ஒரு பொது வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் தங்களின் கடுமையான முயற்சியை பாராட்டுகிறேன்,

19ஆவது திருத்தம் மற்றும் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவை மீள அறிமுகப்படுத்துவதற்கும் மேலதிகமாக ஒரு பரந்த உரையாடலுக்காக முயற்சிப்பதையிட்டு எமது பாராட் டுக்களை தெரிவிப்பதுடன் தனது 10அம்சக் கோரிக்கைகளையும் உங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளுமாறு முன்மொழிகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

 


Add new comment

Or log in with...