Thursday, July 28, 2022 - 11:16am
ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தற்போது தேசிய எரிபொருள் அட்டைக்கு (National Fuel Pass) பதிவு செய்ய முடியுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
தமது வணிக பதிவு இலக்கம் (Business Registration Number) மூலம் தமது நிறுவனத்தின் அனைத்து வாகனங்களையும் fuelpass.gov.lk எனும் இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கி உள்ளிட்ட இயந்திரங்களை தங்களது வாராந்த எரிபொருள் தேவைகளை குறிப்பிட்டு உரிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Add new comment