Vivo வை தெரிவுசெய்ய வேண்டிய முதல் 5 காரணங்கள்

ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் எழுச்சி மற்றும் அது ஸ்தாபித்துள்ள இணைப்பு மூலம், உலகம் முன்னெப்போதையும் விட ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகிவிட்டதுடன், எல்லைகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் தகவல்தொடர்பு இடைவெளியைக் குறைக்கிறது. குறிப்பாக இலங்கையில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சிறந்த புத்தாக்கங்களை பிறப்பித்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப வர்த்தக்கநாமமான vivo, Y மற்றும் V தொடர் பிரிவுகளின் கீழ் வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களின் ரூபத்தின் அதன் படைப்புகளை காட்சிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, வர்த்தகநாமமானது அதன் கெமரா அமைப்பு மற்றும் பிற புத்தாக்க அம்சங்களுக்காக தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது. உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் vivo எப்படி ஒரு குறிப்பிடத்தக்க உறவை உருவாக்கி, அவர்களுக்குப் பிடித்தமானதாக மாறியுள்ளது என்பதைப் பார்ப்போம்!

கெமரா
vivo பாவனையாளர்களின் தேவைக்கேற்ப பலவகையான கெமரா அமைப்புகளை வழங்கும் பல ஸ்மார்ட்போன் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, V தொடர், நிலையான மற்றும் கூர்மையான இமேஜிங்கை சிரமமின்றி உத்தரவாதம் செய்வதுடன், இந்த தொடர் ஸ்மார்ட்போன்கள், நுகர்வோர் பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்காக இரவு புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற பாவனையாளர்களுக்கு உதவுகிறது. vivo V தொடர் பிரிவானது அதன் மேம்பட்ட புகைப்படத் திறன்களுக்காக உலகளவில் அதிகரித்த வரவேற்பைப் பெற்று வருகிறது. Y தொடர் பிரிவு அதன் செயல்திறனுக்காக சந்தையில் அறியப்படுவதுடன், நம்பிக்கைக்குரிய கெமரா தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியுள்ளது.

வடிவமைப்பு
vivo அதன் சாதனங்கள் ஆழமான சந்தை ஆராய்ச்சியின் விளைவாகும் என்ற உண்மையை தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்த வர்த்தகநாமத்தின் புத்தாக்கமானது வாடிக்கையாளர்களின் எப்போதும் மாறிவரும் தேவைகளை நோக்கி கவனம் செலுத்துகிறது. சந்தைப் போக்கின்படி, உள்ளூர் பாவனையாளர்கள் எடைமிக்க ஒன்றைக் காட்டிலும் நேர்த்தியான, இலகுவான சாதனத்தைத் தெரிவு செய்கிறார்கள்.வசதியான கையடக்க உணர்வினை வழங்கும் சாதனங்களின் வரிசையுடன், vivo ஒரு படி மேலே சென்று தனது வாடிக்கையாளர்களை நவநாகரீக வடிவமைப்பில் ஆச்சரியப்படுத்த முடிவு செய்தது. இந்த வர்த்தகநாமமானது, தொழில்துறையின் முதல் நிறத்தை மாற்றும் மிக அழகான glass back cover புத்தாக்கத்துடன் ஸ்மார்ட்போன் வடிவமைப்பின் வரையறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

செயல்திறன்
vivo பற்றிய ஒரு நல்ல அவதானிப்பு என்னவென்றால், இந்த வர்த்தகநாமத்தால் அதன் ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய பற்றரியை வெற்றிகரமாக சேர்க்க முடிந்துள்ளதுடன், அது போனின் ஒட்டுமொத்த கவர்ச்சியை பாதிக்காமையை உறுதி செய்துள்ளது. வேகமான சார்ஜிங் திறன்களை ஆதரிக்கும் சக்திவாய்ந்த பற்றரி சாதனத்துடன், vivo வின் Extended RAM அம்சம் ஸ்மார்ட்போன் தடையின்றி இயங்குவதற்கு உதவுகின்றது. சாதனத்தில் உள்ள மேலதிக ROM space ஆனது RAM ஆக செயல்படும் சுவாரஸ்யமான புத்தாக்கமானது, செயலிகளுக்கிடையில் மாறும் போது பின்னடைவு அல்லது திரை உறைதல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கின்றது.

புத்தாக்கம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வர்த்தகநாமமானது V1+ சிப்பை அறிவித்ததுடன், இது முன்னணி காட்சித் தரத்துடன் கூடிய இமேஜிங் மற்றும் வீடியோ செயலிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான தனிப்பயனாக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சர்க்யூட் சிப் ஆகும்.  இது சுயாதீனமான R&D மற்றும் சிப் வடிவமைப்பில் நிறுவனத்தின் முதல் திருப்புமுனையாக குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. vivo பிராந்தியத்திற்கு பயனளிக்கும் வகையில் 5G தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதுடன், உள்நாட்டு பாவனையாளர்களிடன் அனுபவத்தை மேம்படுத்த அண்மைய மற்றும் சிறந்த தொழில்நுட்பத்தை வழங்குவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை
vivo வின் வாடிக்கையாளர் சேவை உள்ளூர் பாவனையாளர்களை உறுதியான வாடிக்கையாளர் திருப்தியுடன் மகிழ்விக்கிறது. vivo தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன் பாவனையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிக்க முயற்சிப்பதுடன், கொழும்பு மற்றும் காலியில் உள்ள இரண்டு பிரத்தியேக கிளைகள் மூலம் தேசிய அளவில் தனது வாடிக்கையாளர்களை சென்றடைவதன் மூலம் நாட்டில் உள்ள வாடிக்கையாளர் இணைப்பை மூலோபாய ரீதியாக பலப்படுத்தியுள்ளது. தொல்லையில்லாத ஷொப்பிங் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை அனுபவத்தை உறுதி செய்வதற்காக வாடிக்கையாளர்களை வரவேற்கும் அதிநவீன வசதிகள் மற்றும் உபகரணங்களை வர்த்தகநாமம் உறுதி செய்கிறது.


Add new comment

Or log in with...