28 அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்; அதி விசேட வர்த்தமானி

28 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர், சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் 18 அமைச்சரவை அமைச்சர்கள் கடந்தவாரம் (22) பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர். (வர்த்தமானியில் இணைக்கப்பட்டுள்ளன)

இதில் ஒரு சில அமைச்சர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுகள் வழங்கப்பட்டிருந்ததோடு, பாதுகாப்பு, நிதி அமைச்சுகள் ஜனாதிபதியின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, குறித்த அமைச்சர்களுக்கு பொறுப்பான அமைச்சுகள் மற்றும் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அது தவிர, குறித்த 18 பேரும் 23 அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும், பிரதமரின் செயலாளராக அநுர திஸாநாயக்கவின் நியமனமும் குறித்த அதி விசேட வர்த்தமானியில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி உள்ளிட்ட 29 அமைச்சர்களின் பொறுப்புகளும் விடயதானங்களும் கொண்ட அதி விசேட வர்த்தமானியும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் வர்த்தமானியில், செயலாளர்கள் நியமனம் என்பதற்கு பதிலாக அமைச்சர்கள் நியமனம் என அச்சுப் பிழையுடன் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதனை திருத்தி வாசிக்கவும்
(இதனை அறிவிக்க பல முறை அரசாங்க அச்சக திணைக்களத்தை தொடர்புகொள்ள  முயற்சித்தோம் பலனளிக்கவிவில்லை)

PDF File: 

Add new comment

Or log in with...