தாயகம் செல்லும் 75 வருட கனவை நனவாக்கிய இந்தியப் பெண் ரீனா வர்மா

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரிலுள்ள தனது வீட்டிற்குச் செல்ல 75 ஆண்டுகளாகக் கனவு கண்ட தொண்ணூறு வயதுடை ரீனாவர்மா,தனது கனவை நனவாக்கியுள்ளார்.

தனது நீண்ட நாள் அவாவை நிறைவேற்ற புனேவிலிருந்து ரீனாவர்மா பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகருக்கு பயணமானார்.

கல்லூரி சாலையிலுள்ள அவரது வீட்டை நோக்கிச்செல்லும்போது அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அங்குள்ள மக்கள் அவரது வருகையை மேளதாளங்களுடன் வரவேற்றுக் கொண்டாடினர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு சுதந்திர நாடுகளை உருவாக்க வழிவகுத்த பிரிவினைக்குச் சில வாரங்களுக்கு முன்பு, 1947ஆம் ஆண்டில் வர்மாவின் குடும்பம் ராவல்பிண்டியை விட்டு வெளியேறியது.

அப்போது, மதக் கலவரங்கள் வெடித்ததால், இலட்சக்கணக்கான மக்கள் எல்லையைக் கடக்க தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதன்போது, ​​​​ குழப்பமும் ரத்தக்களரியும் ஏற்பட்டது.

இவ்வாறு வந்த ரீனா வர்மா, தனது தாயகத்துக்கு திரும்பச் சென்றமை அவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...