எரிபொருள் விலை ரூ. 50 ஆல் குறைத்தால் மட்டுமே கட்டண குறைப்பு

ஆட்டோ சம்மேளனத்தின் தலைவர்

எரிபொருளின் விலையை மேலும் 50 ரூபாவினால் குறைத்தால் மாத்திரமே முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை குறைக்க முடியுமென முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோலின் விலை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டு தற்போது அது வெறும்

0 ரூபாவினால் மாத்திரமே குறைந்துள்ளதாக இலங்கை சுயதொழில் முயற்சியாளர் தேசிய முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் மஹிந்த குமார சுட்டிக்காட்டி தற்போதைய நிலைமையில் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாதென தெரிவித்துள்ளார்

எரிபொருள் கோட்டா முறையின்படி வாரத்திற்கு 08 லீற்றர் எரிபொருளே கிடைக்கப்பெறுவதாகவும் அது தமது தொழிலை செய்வதற்கு போதாதெனவும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் லலித் தர்மசேக்கர தெரிவித்தார்.

பெற்றோல் விலையை மேலும் குறைத்தால் கட்டணத்தை மாற்றியமைக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...