சாய்ந்தமருது எழுத்தாளர் றிப்கா அன்ஸாருக்கு இந்தியாவின் "சிந்தனை மாமணி" விருது

சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர் றிப்கா அன்ஸார் 'சிந்தனை மாமணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமைவாசல் பவுண்டேஷன், குமரிமாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட

காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி & பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து, பல்துறைசார்ந்தோருக்கான (2022) பெருந்தலைவர் காமராஜரின் மாமணி விருதுக்கான போட்டியை நடாத்தியது.

இதில், இலக்கியத்துறையில், ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருதைச்சேர்ந்த எழுத்தாளர் றிப்கா அன்ஸார் 'சிந்தனை மாமணி' விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டார். தற்போது கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராகக் கடமையாற்றும் இவரை கல்விச் சமூகம் பாராட்டி மகிழ்கிறது.


Add new comment

Or log in with...