ஜனாதிபதி பதவிக்கு இதுவரை டளஸ், சஜித், அநுர போட்டி

பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள இலங்கையின் 8ஆவது ஜனாதிபதி தெரிவுக்கு (ஜனாதிபதித் தேர்தலில்) இதுவரை டளஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (15) டளஸ் அளகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறித்த பதவிக்கான போட்டியில் பங்குபற்றுவதற்காக வேட்புமனு வழங்கவுள்ளதாக, தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே பதில் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

டளஸ் அளகப்பெருமவின் ட்விட்டர் பதிவு

 


ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடவுள்ளேன் என்பதை நான் அறிவிக்கிறேன். இலங்கை புதிய, ஆக்கபூர்வமான போக்கில் களமிறங்க வேண்டுமென நம்புகின்ற சக எம்.பி.க்களின் ஆதரவை நான் கோருகிறேன். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல் மற்றும் இன ஒற்றுமையை பேணியவாறு, ஒன்றாக, பொருளாதார முன்னேற்ற பாதையில் இலங்கையை வழிநடாத்த உறுதி ஏற்போம்.

 

சஜித் பிரேமதாஸவின் ட்விட்டர் பதிவு

 


நான் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகிறேன். தேர்தல் மாவட்டத்தின் அடிப்படையில் 225 எம்.பி.க்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையுடன் கோட்டாபய ராஜபக்‌ஷ கூட்டணி ஆதிக்கம் செலுத்துகின்றது. இது ஒரு மலை போன்ற போராட்டமாக இருந்தாலும் உண்மை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 


Add new comment

Or log in with...