இன்றைய தினத்திற்குள் இராஜினாமாவை கையளிப்பேன்: ஜனாதிபதி கோட்டாபய

- சந்தேகம் கொள்ள வேண்டாம்; அமைதியாக நடந்து கொள்ளவும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்றைய தினத்திற்குள் (13)  இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டிலிருந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தாம் ஏற்கனவே அறிவித்தபடி இன்றைய தினத்திற்குள் தமது இராஜினாமா கடிதத்தை கிடைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதா தெரிவித்ததாக, சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஏற்கனவே பாராளுமன்ற குழு கூட்டத்தில் திட்டமிட்ட வகையில் ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமெனவும், அமைதியான வகையில் நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...