பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணிலை ஜனாதிபதி நியமித்துள்ளார்

- சபாநாயகர் மஹிந்த யாபா அறிவிப்பு
- மேல் மாகாணத்தில் ஊரடங்கிற்கு உத்தரவு
- அமைதியற்று செயற்படுவோரை கைது செய்யவும் உத்தரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால், அரசியலமைப்பின் 31/1 சரத்திற்கு அமைய, ஜனாதிபதியினால் பதில் ஜனாதிபதியாக, ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.

 

 

இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும், அமைதியற்று நடந்துகொள்வோரை கைது செய்யுமாறும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களை கைப்பற்றுமாறும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதேவேளை, துப்பாக்கிகளுடனான ஹெலிகொப்டர்கள் காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்களம் மற்றும் கொழும்பு 07 பிளவர் வீதியிலுள்ள பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றிற்கு அருகில் தாழ்வாக பறப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அலுவலகத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


There is 1 Comment

நான் ரணிலின் நலன்விரும்பியோ அல்லது அரசியல் ஆதரவாளனோ அல்ல, ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கு தேசம் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கட்சி அரசியல் பாகுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20ஆம் திகதி "ஒருமனதாக" வாக்களிக்க வேண்டும். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய அதிபராக ரணிலை நியமிக்க வேண்டும். நூர் நிசாம் - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், "முஸ்லிம் குரல்" அழைப்பாளர் மற்றும் தேசப்பற்றுள்ள குடிமகன்.

Add new comment

Or log in with...