ஜப்பான் தேர்தல்: சுட்டுக்கொல்லப்பட்ட அபேவின் ஆளும் கூட்டணிக் கட்சி வெற்றி

ஜப்பான் பாராளுமன்ற மேலவைத் தேர்தலில், சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாராளுமன்றத் தேர்தலில் அனுதாப அலையை வீசியது.

மொத்தமுள்ள 248 இடங்களில் ஷின்சோ அபேவின் லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பல்வேறு சட்ட திருத்தங்களை பிரதமர் கிஷிடோ தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் குறைந்த அதிகாரம் கொண்ட மேலவைக்கான தேர்தல் பதவியில் உள்ள அரசுக்கான மக்கள் ஆதரவை கணிக்கும் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. கீழவைக்கான தேர்தலே ஆட்சி மாற்றத்தை தீர்மானிப்பதாக உள்ளது.

ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்த அபே தேர்தல் பிரசாரத்தின்போதே கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...