இன்றையதினம் கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளில் எரிவாயு விநியோகம்

- இடங்கள் மற்றும் சிலிண்டர் எண்ணிக்கை விபரம் வெளியீடு
- நாடளாவிய ரீதியில் புதிய சிலிண்டர் விலைகளும் வெளியீடு

இன்றையதினம் (12) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (12.5kg) விநியோகிக்கப்படும் பட்டியலை லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நேற்றையதினம் (11) முதல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் எரிவாயு விநியோகிக்கப்படும் பிரதேசங்கள்

நாட்டின் 4 மாதங்களுக்கு அவசியமான ஒரு இலட்சம் (100,000) மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு கடந்த ஜூன் 30ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

குறித்த 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்பதுடன், இதற்கு உலக வங்கியிடமிருந்து 70 மில்லியன் டொலரை வழங்குமெனவும், மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனம் வழங்குமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய முதலாவது கப்பல் நேற்றுமுன்தினம் (10) நாட்டை வந்தடைந்திருந்தது. அத்துடன் 3,740 மெட்ரிக் தொன் கொண்ட 2ஆவது கப்பல் நேற்று (11) வந்தடையும் எனவும், 3,200 மெட்ரிக் தொன் கொண்ட 3ஆவது கப்பல் ஜூலை 15 இலங்கையை வந்தடையுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இம்மாதம் கொள்வனவுக்காக கோரப்பட்ட மொத்த எரிவாயு 33,000 மெட்ரிக் தொன் என ஜனாதிபதி அலுவலகம் நேற்று விடுத்திருந்த அறிவித்தலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, லிட்ரோ 12.5kg சிலிண்டரின் உச்சபட்ச விலை ரூ. 4,910 (கொழும்பு) என அறிவிக்கப்பட்டுள்ளதோடு. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரலில் லிட்ரோ 12.5kg சிலிண்டரின் விலை ரூ. 2675 இலிருந்து ரூ. 4,860 ஆக ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் கொழும்பு பிரதேசத்தில் சமையல் எரிவாயு விலை ரூ. 50 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் சமையல் எரிவாயு விலைகள் வருமாறு...


Add new comment

Or log in with...