துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணமடைந்துள்ளார்.

ஜப்பானின் மேற்கு நகர பகுதியான நாரா நகரின் வீதியில் இன்று (08) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரசார நிகழ்வொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் அவர் மீது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதைத் தொடர்ந்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவருக்கு பின்னாலிருந்து இரு முறை இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகவும், முதலாவது சூடு அவர் மீது படாத போதிலும் இரண்டாவது சூட்டில் அவர் கீழே வீழ்ந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில், ஜப்பான் கடலோர காவல்படையிலிருந்து ஓய்வுபெற்ற  41 வயதான உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையின் போது, ​​ஷின்சோ அபேயின் வேலைத்திட்டத்தில் அதிருப்தி அடைந்ததன் காரணமாகவே அவரை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகநபர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷின்சோ அபே 2006 - 2007 மற்றும் 2012 - 2020 காலப் பகுதியில் ஜப்பான் பிரதமராக பதவி வகித்திருந்தார் என்பதுடன், ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் எனும் பெயரையும் அவர் கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...