சிம்பாப்வேயில் விலையேற்றத்தை தடுக்க தங்க நாணயம் அறிமுகம்

சிம்பாப்வேயில் நாணய மதிப்பிழப்புக்கு மத்தியில் உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த மாத இறுதியில் அந்நாடு தங்க நாணயங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

அதேபோன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்காக அமெரிக்க டொலரை சட்டபூர்வ நாணயமாக மாற்றுவதற்கான திட்டத்தையும் அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வருடாந்த பணவீக்கம் 190 வீதத்திற்கு மேல் உயர்ந்த நிலையில் மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதம் இந்த மாதம் 200 வீதம் என இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் பிரதான நாணயங்களுக்கு எதிராக சிம்பாப்வே டொலரின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஜூலை 25ஆம் திகதியில் இருந்து தங்க நாணயம் புழக்கத்திற்கு விடப்படும் என்று சிம்பாப்வே மத்திய வங்கியின் ஆளுநர் ஜோன் பீ மன்குட்யா தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...