இன்று பேரணியாக வரும் பௌத்த தேரர்கள் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற தடையுத்தரவு

பல்வேறு அமைப்புகளுக்கு தலைமைத்துவம் வழங்கும் பௌத்த பிக்குகள் சிலருக்கு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (07) சர்வ மத மதகுருமார்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் உள்ளிட்ட குழுவினர் பேரணியாக, கொழும்பு, புறக்கோட்டையின் ஒல்கொட் மாவத்தையிலுள்ள, ஸ்ரீ போதிருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் கூடாரம் அமைத்து தொடர்ச்சியாக தங்கியிருக்கத் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களுக்கு எதிரான கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் புதுக்கடை நீதிமன்றத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கும், நடைபாதைக்கும், தடை மற்றும் அசௌகரியம் ஏற்படுபதை தடுக்கும் வகையில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 'சுரகிமு லங்கா' அமைப்பின் அழைப்பாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் சங்க தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், 'பூமி மாதா மனுசத்' அறக்கட்டளையின் ஸ்தாபகர் களுபோவில பந்தும தேரர் உள்ளிட்ட குறித்த பேரணியில் பங்குபற்றுவோருக்கு, இன்றையதினம் (07) ஒல்கொட் மாவத்தைக்குள் நுழைதல், ஸ்ரீ போதி-ருக்கராம விகாரைக்கு முன்பாக அல்லது புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் வேறு எந்தவொரு இடத்திலோ நின்று, அங்கு பயணிக்கும் பொதுமக்களுக்கு, வாகனங்களுக்கு, வீதியின் இருபுறங்களிலுமுள்ள நடைபாதைக்கு தடை ஏற்படுத்தி அதில் பயணித்தல் மற்றும் தரித்து நிற்பதனை தடுத்து, குற்றவியல் தண்டனைக் கோவைவச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறுவது இலங்கை தண்டனைக் கோவை சட்டத்தின்படி குற்றமாகுமென, அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...