படகு மூலமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 53 பேர் கைது

திருமலை, மன்னார் பகுதிகளில் சம்பவம்

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர். திருகோணமலை - குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதுடன்,20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை பொறுப்பில் எடுத்த குச்சவெளி பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆழ்கடலூடாக ஆஸி செல்ல முற்பட்ட பெண்கள், சிறுவர் உட்பட 53 பேர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடொன்றுக்கு செல்ல முயற்சி செய்த சிறுவர்கள், பெண்கள் உட்பட 53 பேரும் 02 ஆட்கடத்தல்காரர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை இறக்கண்டி கடற்கரை பிரதேசம் மற்றும் மன்னார் தாழ்பாடு கடற்கரை பிரதேசத்தில் (05) இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு குடியேற முயற்சி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 53 பேரும் அவர்களுடன் இரண்டு ஆட் கடத்தல்காரர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்ட கடல் மார்க்கமாக இடம்பெறும் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இலங்கையை சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரை பிரதேசங்களை இணைத்ததாக கடற்படையினர் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் (05) கிழக்கு கடற்படையினரும் குச்சவெளி பொலிஸாரின் உதவியுடன் திருகோணமலை இறக்ககண்டி கடற்கரை பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அவ்வேளையில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கத்துடன் கடற்கரை பிரதேசத்தில் தங்கியிருந்த சந்தேகத்துக்கிடமான 12 ஆண்கள் 11 பெண்கள் 23 சிறுவர்கள் உள்ளிட்ட 46 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு வயது தொடக்கம் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கிண்ணியா,மூதூர், மற்றும் கும்புறுபிட்டியை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் இரவு வடமத்திய கடற்படை கட்டளை பிரிவின் கடற்படையினரின் மன்னார் தாழ்ப்பாடு கடற்கரை பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது டிங்கி படகை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற முயற்சி செய்ததாக சந்தேகிக்கும் 03 ஆண்கள் 01 பெண் மற்றும் 3 சிறு பிள்ளைகள் என ஏழு பேருடன் அந்த ஆட் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு கடத்தல்காரர்களும் தாழ்பாடு கடற்கரையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 05 வயதுக்கும் 48 வயதிற்கும் இடைப்பட்ட கொழும்பு, பதுளை வவுனியா மற்றும் மன்னர் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதோடு அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Add new comment

Or log in with...