புத்துயிர் பெறப் போகிறது ஜம்இய்யதுல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக லௌகீக வழிகாட்டல் தலைமை ஆகும்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாத அடிமைப்படாத ஒரு பாரம்பரிய அமைப்பு. முஸ்லிம்களின் கலாசார விழுமியங்கள், பண்பாடுகளை போதிக்கும் வகையில் செயல்படுகின்ற ஒரு நிறுவனம்.  

இன்று ஆலிம் உலமாக்கள் பல மொழிகளிலும் தீனை போதிக்கும் ஆற்றல் திறமை படைத்தவர்கள். இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் பல்லின சமூகங்கள் மத்தியில் எப்படி வாழ வேண்டும், எவ்வாறு பண்புகளை பேணி வெளிக்கொணர வேண்டும், எப்படி சகவாழ்வை கட்டியெழுப்பி இன மத நல்லிணக்கத்தை மேம்படுத்தி வாழ வேண்டும் போன்ற வழிமுறைகளை போதிக்கின்ற ஆலிம் உலமாக்கள் நிறைந்த காலம்.  

இந்தக் காலத்தில் நாட்டில் பல ஆயிரம் அங்கத்தவர்களை உள்ளடக்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் வரலாற்றில் ஒரு பொதுச்சபைக் கூட்டத்தில் இவ்வளவு எண்ணிக்கையைக் கொண்ட ஆலிம் உலமாக்களை ஒன்று சேர்த்து கூடி உறவாடிய சரித்திரம் கடந்த இரு தசாப்தங்களில் நடந்தேறிய வரலாறு இல்லை என எழுதப்படலாம். இதன் ஒவ்வொரு அங்கத்தவர்களின் ஜனநாயக உரிமை இழைக்கப்பட்ட தெரிவு இடம்பெறுவது ஆலிம்களின் கிலேசமாகும். 

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மக்களின் அபிலாஷைகளையும் நோக்கங்களையும் சரியான நேரத்தில் பூர்த்தி செய்யாததும் ஒரு கவலையே. இதன் காரணமாக இந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மக்கள் மத்தியில் அதிருப்தியை பெற்றிருக்கிறது. 

இது இப்படி இருக்க, தற்போதுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றுள்ள வேளையில் புதிய தலைமைத்துவத்துவதிற்கு வழிவகுக்க வேண்டும். புதிய பயணத்திற்கு தயார் நிலையில் தெரிவு இடம்பெறும் ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அறியக் கிடைக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது தூய பணிகள் மிகச்சிறப்பாக இடம்பெற அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திப்போம்.

மௌலவி
எஸ்.எம்.எம். முஸ்தபா
(பலாஹி) உறுப்பினர்- அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா


Add new comment

Or log in with...