உலக வங்கியின் நிதியுதவியில் மூன்று மாதங்களுக்கு மானியம்

தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அமுலிலுள்ள நலனோன்பு நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் சமுர்த்தி நலனுதவி பெற்று வரும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி காத்திருப்புப் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மூன்று மாதங்களுக்கு மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கமைய, அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறக்காமம் சமுர்த்தி வங்கியினால் சமுர்த்தி நன்மை பெற்று வரும் குடும்பங்களுக்கான குறித்த மானியத் தொகை வழங்கும் நிகழ்வு ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.

இறக்காமம் சமுர்த்தி வங்கியில் மாதாந்தம் மானியம் பெற்றும் வரும் சுமார் 1800 குடும்பங்களும், சமுர்த்தி காத்திருப்புப் பட்டியலிலுள்ள 849 குடும்பங்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளன.

சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நஸீல், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லீம், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.செல்வகுமார், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

றிசாத் ஏ. காதர்...

(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)


Add new comment

Or log in with...