மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று புதன்கிழமை (6) காலை 9மணிக்கு இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருசிவசிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் திகதி பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை (5) மதியம் 12மணிவரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதனையடுத்து  சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும் நடைபெற்றன.

நேற்று புதன்கிழமை (6) காலை 9 மணியளவில் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா  நடைபெற்றது. இதன் போது குருக்கள் மற்றும் மக்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...