சீமெந்து விலை மீண்டும் ரூபா 200 ஆல் அதிகரிப்பு

பக்கற்றின் புதிய விலை ரூ.3,200 ஆனது

சீமெந்து பக்கெற் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பக்கெற் ஒன்றின் புதிய விலை 3200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கெற் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து பக்கெற்றின் விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக சீமெந்து பக்கெற்றுகளை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதில் பாரிய அசெளகரியங்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக சீமெந்து விநியோகஸ்தர் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர். சீமெந்து விலையேற்றம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் நிர்மாணத் துறையில் ஈடுபடுவோரும் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...