எதிர்வரும் நாட்களில் 5 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன

உரிய பணத்தை செலுத்த மத்திய வங்கி தயார்

எதிர்வரும் நாட்களில் 5 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளபோதும் அவை ஒரே நாளில் வரும் என்பதில் உண்மை கிடையாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

10 ஆம் திகதி மற்றும் 15,17 ஆம் திகதிகளில் இரண்டு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் 08 – 09 க்கு இடையில் வரவிருந்த கப்பல் 10 ஆம் திகதி வரும் என்றும் 22 – 23 ஆம் திகதிகளுக்குள் பெற்றோல் கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து சரியானது என்று குறிப்பிட்ட அமைச்சர், 22,-23 நாட்களுக்கு முன்னர் வரவிருந்த பெற்றோல் கப்பலுக்கு முற்பணத்தை செலுத்துவதற்கு இடையூறு ஏற்படாத பட்சத்தில் அது சரியெனவும் அமைச்சர் தெரிவித்தார். உரிய பணம் செலுத்திய பிறகு 13-,15க்குள் பெற்றோல் கப்பலொன்றை கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

பெற்றோல் கப்பலுக்கு செலுத்துவதற்காக மத்திய வங்கி 26 மில்லியன் டொலர்களை தயார் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விஜித ஹேரத் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...