ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய அம்சமான அரஃபா உரை இனி தமிழலும் வரும் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
அரஃபா தினம் இஸ்லாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 9ஆம் திகதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு ஏற்கனவே 10 மொழிகளில் இடம்பெறுகிறது.
இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சவூதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்காவில் உள்ள அல் நிம்ரா பள்ளிவாசலில் நிகழ்த்தப்படும் அரஃபா நாள் சொற்பொழிவு கடந்த ஐந்தாண்டுகளாக அரபு தவிர்த்த உலகின் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த மொழிபெயர்ப்பு 20 கோடிப் பேருக்கு பயனளிக்கும் என்றும் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரு புனித பள்ளிவாசல்களுக்கான பொது தலைமையின் தலைவர் அப்துல் ரகுமான் அல்–சுதைஸ் தெரிவித்தார்.
Add new comment