ஆபிரிக்க நத்தையினால் அமெரிக்காவில் முடக்கம்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பாஸ்கோ வட்டாரத்தில் இராட்சத ஆபிரிக்க நத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த வட்டாரத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

20.3 சென்டிமீற்றர் வரை வளரக்கூடிய இராட்சத ஆபிரிக்க நத்தைகள் விரைவில் பெருகிவரும் நிலையில் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவை ஆண்டுக்கு 2,500 முட்டைகள் வரை போடக்கூடியவை என்பதால் நத்தைகளைக் கட்டுக்குள் வைப்பது சிரமம். அத்துடன் அவ்வகை நத்தைகள் மனிதர்களுக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை.

அவற்றிடம் உள்ள ஒட்டுண்ணி, மனிதர்களுக்கு மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சட்ட விரோதமான செல்லப்பிராணி விற்பனையின் வழி இராட்சத ஆபிரிக்க நத்தைகள் வட்டாரத்தில் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நத்தைகளை வாங்கிய சிலர் அவற்றை வெளியே வேண்டுமென்றோ தெரியாமலோ விட்டுச் சென்றிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Add new comment

Or log in with...