சடலம் மீட்பு

வட்டவளை, அக்கரவத்தை தோட்டத்தில் கடந்த 3ஆம் திகதி காணாமல் போன நிலையில், தேடப்பட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54வயதுடைய பி.விஜயலெச்சுமி என்ற தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நோட்டன் ஆற்றுடன் இணையும் அக்கரவத்தை ஆற்றுப்பகுதியில் இருந்தே இவர் 04/07பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஆற்றுப்பகுதியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மீட்கப்பட்ட சடலம் ஹற்றன் நீதவான் நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக வட்டவளை வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...