நிந்தவூரில் முறைகேடுகள் எதுவுமின்றி மக்களுக்கு சேவையாற்றும் எரிபொருள் நிரப்பு நிலையம்

நிந்தவூர் அட்டப்பள்ளம் ஒஷாகா லங்கா (ஐ.ஓ.சீ) எரிபொருள் நிரப்பு நிலையமானது எரிபொருள் நெருக்கடி நிலையிலும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்கி வருவதாக மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். நாட்டில் தற்போது நிலவுகின்ற பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து, பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு எரி பொருள் நிரப்பு நிலையங்களிலும் வரிசையில் காத்திருப்பதனை நாளந்தம் அவதனிக்கிறோம்.  

இந்நிலையில் நிந்தவூர் ஒஷாகா லங்கா (ஐ.ஓ.சீ) நிறுவனமானது பொதுமக்களை அசௌகரியப்படுத்தாது சிறந்த சேவையினை வழங்கி வருவதாக பாராட்டுத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் எரிபொருள்களுக்கான விலை அதிகரிக்கப்பட்ட வேளையில் மேற்படி நிறுவனம் முந்திய விலையான ரூபா 420இற்கே பெற்றோல் வினியோகித்ததை அவதனிக்க முடிந்தது. 

அன்றைய தினம் தமது நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 6600லீட்டர் பெற்றோல் முழுவதும் தீர்ந்து போகும் வரை முற்றுமுழுதாக பொதுமக்களுக்கு பழைய விலையிலேயே விநியோகிக்கப்பட்டதற்காக பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

கடந்த பல வருடங்களாக எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் ஆகிய சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்ற இந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மக்களின் தேவை, கஷ்டங்களை உணர்ந்து   பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது.     வரிசையில் பாகுபாடு காட்டாது, அறிந்தவர்கள் அறியாதவர்கள் என்ற வேறுபாடுயின்றி வரிசை ஒழுங்கு முறைப்படி எரிபொருள், எரிவாயு என்பவற்றை விநியோகிப்பதாக மக்கள் தெரவிக்கின்றனர். நிந்தவூர் பிரதேச மக்கள் மாத்திரமல்லாது,அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச மக்களும் இந்நிறுவனத்தின் சேவையை பெற்றுக் கொள்கின்றனர். 

நிறுவனத்தின் உரிமையாளர்களான சகோதரர்கள் அஸ்வத்கான் மற்றும் அலிகான் ஆகியோர், எரிபொருள் நெருக்கடியினால் எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு தமது நிறுவனத்தை நாடி வரும் மக்களுக்கு களத்தில் நின்றுகொண்டு எரிபொருள் தட்டுபாட்டு நிலமைகளை விளக்குவதோடு,தமது நிறுவனத்திலுள்ள எரிபொருள்,மற்றும் எரிவாயுவினை சிறந்த முறையில் பங்கிட்டு வருவதை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.  

அம்பாறை மாவட்டத்திலுள்ள மருதமுனை முதல் பொத்துவில் வரையான பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிறுவனத்திலிருந்து எரிவாயு சேவையினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

   எம்.எப். றிபாஸ் 
(பாலமுனை தினகரன் நிருபர்)

Add new comment

Or log in with...