சிறுவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டி

முல்லைத்தீவு - குமுழமுனை - தாமரைக்கேணி சிறுவர் முன்பள்ளியில் சிறுவர்களுக்கான இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் இடம்பெற்றது.

குமுளமுனை கிழக்கு தாமரைக்கேணி முரளி முன்பள்ளியில் இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது. இப் போட்டியில் நீர் நிரப்பல் ,பழம் பொறுக்குதல், நிறம்தெரிதல், ஓட்டம், வினோத உடை போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறார்களுக்கு பரிசு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

முரளி முன்பள்ளி நிர்வாக தலைவர் சி.சுரேஷ் தலைமையில் ஆரம்பமாகிய மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராக போதகர் இராதகிருஷ்ணன், குடும்பநல உத்தியோகத்தர் சு.சிவகுமாரி முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

ஓமந்தை விஷேட நிருபர்


Add new comment

Or log in with...