திங்கள் முதல் கொன்சியூலர் சேவைகள் மீண்டும் வழமையான வகையில்

- அனைத்து பிராந்திய அலுவலகங்களும் சேவையில்

கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் வழமையான வகையில் சேவைகளை வழங்கவுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் அலுவலகம் திறந்திருக்மேன அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகரித்துள்ள கொன்சியூலர் சேவைகள் தொடர்பில் கருத்தில் கொண்டு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை, குருணாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இவ்வாறு சேவையில் ஈடுபடுமென, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...