மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளுக்காக விரைவு

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேற்று அங்கு சென்றுள்ளதாகவும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆணைக்குழுவின் தலைவி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, அது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில், அங்குள்ள தற்போதைய நிலைமைகளை ஆராய்வதற்காக நேற்றைய தினம் குழுவொன்று அங்கு சென்றதாகவும் அவர்கள் விசாரணைகளை நடத்தி வழங்கும் அறிக்கையின்படி சம்பவங்கள் தொடர்பில் முழுமையான சுயாதீனமான விசாரணைகளை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கைதியொருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்துள்ளதையடுத்து அங்கு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த 700 க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். அதனையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக சுமார் 600 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டதுடன் ஏனையோரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...