இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலர் கனடாவின் முன்னேற்றத்தில் பங்களிப்பு

கனடா தினம் இன்று அனுஷ்டிப்பு; இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் வாழ்த்து

கனடா தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினத்தில் கனேடியர்கள் ஒன்றாக தமது நாட்டின் சாதனைகளைக் கொண்டாடுவதுடன், அவ்வாறு கொண்டாடுவதில் ஒரு மகிழ்ச்சி உள்ளதாக அவர்கள் நம்புகின்றனர். சிறந்ததொரு கனடாவைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதால், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் சிந்திக்கின்றோம்.

கனடா தினமானது குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தில் கவனம்செலுத்துவதுடன், முறைசார் ரீதியாகக் கொண்டாடப்படுகிறது. கனேடியர்களின் அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாத உணர்வை இது பிரதிபலிக்கின்றது. அவர்களது தனிப்பட்ட அடையாளங்களின் பல்வகையான பிரஜாநிலைகளை, பல்வேறுபட்ட படைகளை மப்பிள் (MAPLE) இலையின் கீழ் கனேடியர்களாக அனைவரையும் ஒன்றுசேர்க்கும் உணர்வுக்குள்ளான ஒருங்கிணைப்பை இயலச் செய்கிறது.

கொள்ளைநோயின் கொடுமை எங்களை விட்டு நீங்கியுள்ளது. ஆனால் அதன் பின்னர் உலகளாவிய விளைவுகளின் பெரிய நெருக்கடிகள் உலகத்தைச் சூழ எழுந்துள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்கதாக உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு உள்ளது.

இலங்கையில், இவ்வாறான புறத்தாக்கங்களினால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது. சுமார் கடந்த 70 ஆண்டுகளாக நாம் ஆற்றியதைப் போன்றே பெருந்தொற்றின் போதும், இந்த நெருக்கடி நேரத்திலும் கனேடியர்கள் தனது ஆதரவை வழங்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களின் கொள்வனவுக்கான நிதியை நாம் வழங்குகின்றோம். தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சிக்கு உடனடியான தேவையாகவுள்ள அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு உலக உணவுத் திட்டத்துடனும் கனடா பணியாற்றுகின்றது. நெருக்கடி அதிகரிக்கின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு, செம்பிறைச் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த சவால்மிக்க நேரத்திலும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையர்களின் விசேட ஆர்வத்தை நான் பாராட்டுகின்றேன். கனடாவில் நாம்கூட இது தொடர்பான ஒரு சட்டவாக்கத்தை அங்கீகரித்து முடிவுக்குக் கொண்டுவருதல் உட்பட சுதேசிய மக்களுடனான மீளிணக்கத்தை முன்கொண்டு செல்வதனால் எல்லோருக்குமான ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக உழைக்கின்றோம். உலகம் முழுதிலும் இருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புலம்பெயர்வாளர்களைத் தொடர்ந்து வரவேற்றுக் கொண்டிருந்த பொழுதிலும், எமது அழகான நாட்டின் பூர்வகுடிகளின் வழித்தோன்றல்களை ஏற்றுக் கொண்டு கனேடிய சமூகத்தில் முழுமையாகக் கொண்டாடுவதை நிச்சயப்படுத்த நாம் விரும்புகின்றோம். இதனோடு தொடர்புட்ட வகையில் கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிக்கின்றது.

கனடாவை வடிவமைப்பதிலும், முன்னேற்றுவதிலும் தொடர்ந்து செயற்படும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பல கனேடியர்கள் பற்றி ஒரு குறிப்புடன் முடிக்காவிடில் அது ஒரு பெரிய கவனக்குறைவாக இருக்கும். பல்வகைத் தன்மை, ஐக்கியம் என்பவற்றுக்கான ஒரு தினமாக ஏன் நாம் கனடா நாளைக் கொண்டாடுகின்றோம் என அவர்கள் சான்று பகர்வர். கனடா தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

டேவிட் மெக்கினொன்...
(இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்)


Add new comment

Or log in with...