Thursday, June 30, 2022 - 4:10pm
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மெரியா ரெசாவினால் நிறுவப்பட்ட புலனாய்வு செய்தித் தளம் ஒன்றை மூடும்படி பிலிப்பைன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரப்லெர் என்ற அந்த தளம் பிலிப்பைன்ஸின் ரொட்ரிகோ டுடெர்டேவின் அரசை விமர்சிக்கும் ஒருசில ஊடக நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
டுடெர்டே பதவியில் இருந்து வெளியேறி அவரது கூட்டாளியான பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள நிலையிலேயே நிர்வாகம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பிரஜையாகவும் இருக்கும் ரெசா கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சிக்காக ரஷ்ய ஊடகவியலாளர் டிமிட்ரி முரடோவ் உடன் சேர்ந்து 2021 ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்றார்.
Add new comment