Thursday, June 30, 2022 - 12:02pm
செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டுள்ள நாசாவின் கியூரியோசிட்டி மற்றும் பெர்செர்வன்ஸ் ரோவர் விண்கலன்களை கொண்டு அக்கிரகத்தின் நிலப்பகுதியை மேலும் ஆழமாக தோண்டி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அமினோ ஆசிட் படிமங்கள் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதை கண்டுபிடிக்க உதவும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புரதங்கள் உற்பத்திக்கு அமினோ ஆசிட் மிகவும் முக்கியமானது என்றும் அதன்மூலம் என்சைம்கள் உருவாகி உயிர்களுக்கு வடிவம் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Add new comment