நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக

- ஜூலை 04 முதல் அமுலாகும் வகையில் நியமனம்

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக மேலும் 6 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக் கடிதம் இன்று (30) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நந்தலால் வீரசிங்கவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க கடந்த ஏப்ரல் 07ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதித்துறையில் பரந்த அனுபவமுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்றீடு நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளராகவும், உதவி ஆளுநராகவும், சிரேஷ்ட பிரதி ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

நந்தலால் வீரசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டதாரி விரிவுரையாளராகவும், மலேசியாவில் உள்ள SEACEN மையத்தில் வருகைதரு ஆராய்ச்சி பொருளாதார நிபுணராகவும் உள்ளார். அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் Crawford யில் உள்ள பொதுக் கொள்கை மற்றும் பயன்பாட்டு பேரண்ட பொருளாதார பகுப்பாய்வு மையத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.


Add new comment

Or log in with...