ஜூலை 10ஆம் திகதி இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள்

ஹிஜ்ரி 1443 துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்றையதினம் (30) நாட்டின் சில பகுதிகளில் தென்பட்டுள்ளது.

அதற்கமைய, துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பிறைக்குழு ஆகியன இணைந்து இவ்வறிவிப்பை ஏகமனதாக வெளியிட்டுள்ளது.


Add new comment

Or log in with...