மஹிந்த ராஜபக்‌ஷ வைத்தியசாலையில்; தகவலை அலுவலகம் மறுப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக நோய்வாய்ப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்கள் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆயினும், இதனை முற்றாக மறுப்பதாக முன்னாள் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவர் தனது நாளாந்த கடமைகளை எவ்வித தடைகளும் இன்றி மேற்கொள்வதாகவும், பிரதமரின் முன்னாள் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிபிட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், அவரது அலுவலகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ஜி. காசிலிங்கம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவிலும் இத்தகவலுக்கு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளதோடு, இவ்வாறான செய்திகளை பகிரும் முன் உறுதிப்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

இதற்கு முன்னரும் கடந்த ஏப்ரல் மாதம் அவர் பிரதமராக பதவி வகிக்கும் வேளையில் இவ்வாறான வதந்தியொன்று பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...