விற்பனை செய்யும் பொருட்களில் ஜூலை 28 முதல் விபரங்கள் கட்டாயம்

ஜூலை 28 முதல், அனைத்து வர்த்தக பொருட்களிலும் உச்சபட்ச சில்லறை விலை, நிறை, அளவு, உற்பத்தி மற்றும் பொதியிட்ட திகதி, காலாவதி திகதி, உற்பத்தியாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்டிருந்தல் அவசியமென அவிறித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் குறித்த அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

நுகர்வோரினால் விலைக்கு கொள்வனவு செய்யப்படும் அனைத்து வியாபார பொருட்களினதும் இறுதி உற்பத்தியின் பொதியுறை அல்லது கொள்கலன் மீது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக விளங்கக்கூடிய இடத்தில் அச்சடித்தல் அல்லது அகற்ற முடியாத சுட்டுத் துண்டு மூலம் வெளிப்படுத்தினாலன்றி, அத்தகைய பண்டங்களை இறக்குமதி செய்யவும் தயாரிக்கவும் உற்பத்தி செய்யவும் களஞ்சியப்படுத்த மினி வைக்கவோ பொது இடமோ மேல் போய்விடுமோ விற்பனை செய்யவும் இப்பணிக்கு காட்சிப்படுத்தும் இப்பணிக்காக வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக முடியாதன பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து இறக்குமதியாளர்கள், தயாரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், பொதியிடுபவர்கள், நிகழ்நிலை வியாபாரிகள் (Online Traders), வியாபாரிகளுக்கு இவ்வுத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய

  1. உச்சபட்ச சில்லறை விலை
  2. நிறை அல்ல தொகை
  3. உற்பத்தி செய்த திகதி/ மீள் பொதியிடப்பட்டிருப்பின் பொதியிடப்பட்ட திகதி
  4. காலாவதி திகதி/ பாவனைக்கு உகந்த கடைசி திகதி/ செயற்பாட்டுக் காலம் (காலாவதியாகாத பொருட்களுக்கு அவசியமில்லை)
  5. தொகுதி/ குறியீட்டு இலக்கம்
  6. உற்பத்தியாளரின் பெயர்/ பதிவு செய்யப்பட்ட முகவரி, தொலைபேசி இலக்கம்
  7. இறக்குமதி செய்யப்பட்டிருப்பின் இறக்குமதி செய்யப்பட்ட நாடு, வழங்குநர் அல்லது இறக்குமதியாளர் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம்/ இணையத்தளம்


Add new comment

Or log in with...