வடமராட்சி கிழக்கிலிருந்து மடுமாதா திருத்தலத்துக்கான பாதயாத்திரை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரை கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மடு அன்னையின் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்வதற்கான பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்திலிருந்து கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது.

இவர்கள் ஏ 9 வீதி வழியாக  பளை கிளிநொச்சி முறிகண்டியிலிருந்து கொக்காவில் வீதி வழியாக ஐயன்கன்குளம் வரை சென்று மல்லாவி வழியாக நட்டாங்கண்டலைச் சென்றடைந்தது, நேற்று புனித மடு திருத்தலத்தை சென்றடைந்துள்ளனர். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் நீங்கவும் , நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழவும் பிரார்த்தனை செய்வதாக பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்திலிருந்து வருடம் தோறும் பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மடு திருத்தலத்தில் ஆடிமாதம் 2ஆம் திகதி இடம்பெறும் உற்சவத்தில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...