சீனா உய்குர் மக்களை கட்டாய உழைப்புக்கு பயன்படுத்துவதால் சின்ஜியாங்க் மாகாணத்தின் உற்பத்தி பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை அமெரிக்க சட்டமொன்று தடை செய்துள்ளது,
உய்குர் கட்டாய உழைப்பு சட்டம் என்ற பெயரிலான இச்சட்ட விதிகளின் ஊடாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டாய உழைப்பின் மூலமான சீன உற்பத்திகளின் இறக்குமதியைத் தடுப்பதற்காக அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், “உய்குர் கட்டாய உழைப்பு தடுப்புச் சட்டத்தின் விதிகளை அமெரிக்க சுங்கமும் எல்லைப் பாதுகாப்பு பிரிவும் நடைமுறைப்படுத்தும். இதன் ஊடாக சின்ஜியாங் மாகாணத்தின் கட்டாய உழைப்பு மூலமான உற்பத்தி பொருட்கள் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்பட இடமளிக்கப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Add new comment