கெமரூன் இன மோதலில் 30 இற்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு கெமரூனில் இனரீதியான தாக்குதல் ஒன்றில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 30க்கும் அதிகமான கிராம மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரிய எல்லைக்கு அருகில் பகின்ஜோவ் கிராமத்தில் வார இறுதியில் இந்தப் படுகொலை இடம்பெற்றிருப்பதாக கெமரூனின் பிரைபைடேரியன் தேவாலயத்தின் பேச்சாளர் சங்கைக்குரிய பொன்கி சாமுவேல் போர்பா தெரிவித்துள்ளார்.

ஒலிட்டி மற்றும் மெசகா எகோல் இனக் குழுக்களுக்கு இடையே நிலப் பிரச்சினை ஒன்று தொடர்பாகவே அந்த மோதல் வெடித்திருப்பதாக போர்பா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

“ஒலிட்டி மக்கள் 2022 ஏப்ரல் 29 ஆம் திகதி மெசகா எகோல் மக்கள் சிலரை தாக்கிக் கொன்றனர். அதற்கு மெசகா எகோல் மக்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ஆபிரிக்க நாடான கெமரூனில் இன மோதல்கள் அடிக்கடி இடம்பெற்றபோதும் இந்த அளவான உயிரிழப்புகள் தூர வடக்கு பிராந்தியத்தில் பதிவாகி வருகின்றன. கடந்த டிசம்பரில் கால்நடை வளர்ப்பு, மீன்பிடி மற்றும் விவசாய சமூகங்களுக்கு இடையே இரண்டு வாரங்கள் நீடித்த மோதலில் 44 பேர் கொல்லப்பட்டு 111 பேர் காயமடைந்தனர்.


Add new comment

Or log in with...