மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறுவதில் ஜூலை 29 வரை சலுகை

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை அபராதம் விதிக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே.எம். ஜயந்தி விஜேதுங்க அறிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நெருக்கடி காரணமாக, கடமைக்கு வரும் ஊழியர்கள் மற்றும் சேவையைப் பெற வரும் பொதுமக்களுக்கு போக்குவரத் சிரமம் ஏற்பட்டுள்ளதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பான அபராதத் தொகையை ஜூலை 29ஆம் திகதி வரை அறவிடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், மேல் மாகாண மோட்டார் வாகனத் திணைக்களத்தின் www.motortraffic.wp.gov.lk எனும் இணையத்தளத்தை அணுகுவதன் மூலம், ஒன்லைன் மூலம் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...