மட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்ற செயற்பாடுகள்

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நீதிமன்ற பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தடை உத்தரவு கோரி, அவசர வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளை குறித்த நாளில் காலை 10 மணிக்குள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அதே தினத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் காலை 10.30க்கு முன்னதாக அறிவித்தல் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...