கட்டார் எரிசக்தி அமைச்சருடன் கஞ்சன நேற்று பேச்சுவார்த்தை

இலங்கைக்கு பெற்றோலிய பொருட்கள், சமையல் எரிவாயு பெற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சு நடத்தவென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டார் சென்றுள்ளார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நேற்று கட்டார் எரிசக்தியின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் கட்டார் எரிசக்தித் துறை அமைச்சருமான Saad Sherida Al-Kaabi ஐ சந்தித்து பேச்சு நடத்தினார்.

கட்டார் எரிசக்தி துறையின் உதவியோடு எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெற்றோலிய பொருட்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவர் பேச்சு நடத்தினார்.

அரசுடைமையான கட்டார் எனர்ஜி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கை எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெற்றோலிய உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் கட்டார் சென்றுள்ளனர்.


Add new comment

Or log in with...