ஆண்களுடன் பாலுறவை தவிர்க்க அமெரிக்கப் பெண்கள் போராட்டம்

கருக்கலைப்புக்கான பெண்களின் உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்ததை அடுத்து அந்நாட்டு பெண்கள் ஆண்களுடன் பாலுறவில் ஈடுபடுவதில் இருந்து தவிர்க்கும் போரோட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஆண்களுடன் பாலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது குறித்து கருக்கலைப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் பிரசாரங்கள் வலுத்து வருகின்றன. நியுயோர்க்கில் கடந்த ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 வயது பிரியானா கெம்பல், நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கூறும்போது, “விதைநாள அறுவை சிகிச்சை செய்துகொள்ளாத ஆண்கள் மற்றும் அவ்வாறு செய்துகொண்ட போதும் எனது உரிமைக்காக போராட வீதிக்கு இறங்காதவராக இருந்தால் என்னுடன் பாலுறவில் ஈடுபட உங்களுக்கு தகுதியில்லை” என்றார்.

“பெண்களை தொடர்ந்து அடக்கி வைக்கலாம் என்று இந்த உலகம் நினைத்தால், நாம் எமது கால்களை மூடிக்கொள்வோம்” என்று மாயா டெம்ரி என்ற பெண் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...